தினை அரிசி உப்புமா செய்ய தேவையான பொருள்கள் :
தினை அரிசி – 1 கப்,
வெங்காயம், கேரட் – 1கப்,
காய்ந்த மிளகாய் – 3
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
குடமிளகாய் – ஒன்று
பச்சைப் பட்டாணி – 1/2 கப்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
மஞ்சள்தூள் – 2 சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
முதலில் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட், குடமிளகாயை சேர்க்கவும்.
அதன் பின் ஒரு கப் திணை அரிசிக்கு இரண்டு கப் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும். கொதித்ததும் உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் போட்டு, திணை அரிசியை போட்டு மூடி. 10 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.