தேங்காய்ப்பூ அடை செய்ய தேவையான பொருள்கள் :
தேங்காய் துருவல் – 1 கப்,
இட்லி அரிசி – 2 கப்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
முதலில் இட்லி அரிசியை ஊற வைத்து அரைத்து எடுக்கவும். பின் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கி வைக்கவும்.
அதன் பின் சிறிது நேரம் கழித்து, மாவை அடைகளாக தோசைக் கல்லில் வார்த்து, எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும். சூடான தேங்காய்ப்பூ அடை தயார்.