தேங்காய் சாதம் செய்ய தேவையான பொருள்கள் :
பாசுமதி அரிசி -250 கிராம்
பச்சை மிளகாய் – ஒன்று
உளுத்தம் பருப்பு – 4 டீஸ்பூன்
பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன்
முற்றிய தேங்காய் – ஒன்று
எண்ணெய் – 4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
வறுத்த முந்திரி பருப்பு -10
கடுகு – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
முதலில் பாசுமதி அரிசியில், ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்
அதன் பின் வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய் பொட்டுக்கடலை தாளித்து, தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை வறுத்துதெடுகவும்.
அடுத்து சாதத்துடன் சேர்த்து, உப்பு போட்டு கலக்கவும். கறிவேப்பிலை நறுக்கிப் போட்டு, வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கலக்கவும். தேங்காய் துருவல் சாதம் தயார்.