Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான நண்டு மசாலா … செய்து பாருங்கள் …!!!

நண்டு மசாலா செய்ய தேவையான பொருள்கள் :

நண்டு                                                                – 10
பச்சைமிளகாய்                                            – 3
இஞ்சி, பூண்டு விழுது                               –  3 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள்                                                   – 1 தேக்கரண்டி
தக்காளி                                                            – 1 கப்
மிளகாய்த்தூள்                                             –  1 தேக்கரண்டி
வெங்காயம்                                                   –  அரை கப்
தேங்காய்த்துருவல்                                   –  அரை கப்
காய்ந்த மிளகாய்                                          – 3
கடுகு, எண்ணெய்,  உப்பு                           –தேவையான அளவு

செய்முறை : 

முதலில் நண்டை தண்ணீரில் நன்கு அலசி, இரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும்.

அதனை அடுத்து தக்காளியையும் கழுவி சிறியத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலையையும், கொத்தமல்லியையும் கழுவி, கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கவும்

அதன் பின் பச்சை மிளகாயின் காம்புகளை நீக்கி, நறுக்கி, தேங்காய்த்துருவலுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பின் பெரிய வாணலியாக எடுத்துக் கொண்டு, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் காய்ந்த மிளகாயினைப் போட்டு ஐந்து விநாடிகள் வதக்கி இஞ்சி, பூண்டு விழுதினையும் சேர்த்து நன்கு வதக்கவும்

பிறகு விழுதுகளின் நீர் ஆவியாகும் வரை வதக்கி, அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.

அடுத்து தக்காளியைப் போட்டு, எண்ணெய் விடும் வரை வதக்கவும். பின் தீயின் அளவைக் குறைத்து தேங்காய் விழுதினைச் சேர்க்கவும்.

அடுத்தது சுமார் இரண்டு நிமிடங்கள் புரட்டிய பின் நண்டுகளையும், கறிவேப்பிலையையும் போட்டு, ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

பின் தீயின் அளவைக் குறைத்துக் கொள்ளவும். அவ்வபோது கிளறிவிட்டு சுமார் 25 நிமிடங்கள் வேகவிடவும். நன்கு வெந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழையினைத் தூவி பின்பு பரிமாறவும்.

Categories

Tech |