Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான நண்டு ரோஸ்ட்… செய்து பாருங்கள் …!!!

நண்டு ரோஸ்ட் செய்ய தேவையான பொருள்கள் :

இஞ்சி பூண்டு விழுது    –  3 தேக்கரண்டி
எண்ணெய்                         –  3  மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம்       –   2
தேங்காய்பால்                  –  5  மேசைக்கரண்டி
மிளகு பவுடர்                    –   4 தேக்கரண்டி
உப்பு                                      – தேவைக்கேற்ப
மிளகாய் பொடி               –   2 தேக்கரண்டி
சீரகப்பவுடர்                      –    2 தேக்கரண்டி
நண்டு                                   –    2 கிலோ

செய்முறை :

முதலில் நண்டை சுத்தம் செய்து துண்டங்கள் செய்யவும்,பின்பு வெங்காயத்தை பொடிதாக நறுக்கவும்

அதன் பின் வாயகன்ற கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விடவும், சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும்வரை வதக்கவும்.

பிறகு அதில் மிளகாய் பவுடர் போட்டு வதக்கி மேலும் அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு வாசனை வரும் வரை கிளறவும். பிறகு அதில் நண்டு துண்டங்களைப் போட்டு கிளறவும்

பின்பு  அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து கடைசியில் தேங்காய்பால் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.மிதமான தீயில் மூடி வேகவிடவும்,

அடுத்து  திறந்து கிளறி விடவும், நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து மசாலா கெட்டியானவுடன் இறக்கவும். சுவையான நண்டு ரோஸ்ட்.

Categories

Tech |