Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பரங்கிக்காய் இனிப்பு கறி… செய்து பாருங்கள் …!!!

பரங்கிக்காய் இனிப்பு கறி செய்ய தேவையான பொருள்கள் :

பரங்கிக்காய்              –  300 கிராம்
வெல்லத் தூள்         –    1/2கப்
தேங்காய் துருவல் –    1/2கப்
ஏலக்காய்                     –  4
கலர் பவுடர்                –   2 சிட்டிகை

 செய்முறை :

முதலில்பரங்கிக்காயைச் சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஏலக்காயைப் பொடி செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் பரங்கிக்காய்த் துண்டுகளைப் போட்டு 5 நிமிடங்கள் வேகவிடவும்.

அதன் பின் தண்ணீர் கொதித்து, சற்று வற்றியதும் அதில் வெல்லத் தூளைச் சேர்த்துக் கிளறி கரையவிடவும். அதனுடன் தேங்காய் துருவல், கலர் பவுடர், ஏலக்காய்ப் பொடி சேர்த்து 5 நிமிடங்கள் கிளறவும். நன்கு கிளறிவிட்டு திரண்டு வரும் போது இறக்கிவிடவும். சுவையான பரங்கிக்காய் இனிப்பு கறி தயார்.

Categories

Tech |