பருப்பு குழம்பு செய்ய தேவையான பொருள்கள் :
துவரம் பருப்பு – 1/2 கப்
தக்காளி – 1
வெங்காயம் – 1
கொத்தமல்லி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு, சீரகம் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
பெருங்காயத்தூள் -தேவையான அளவு
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நறுக்கி பருப்புடன் சேர்த்து வேக வைக்கவேண்டும் . இப்பொழுது உருளியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும் .
அதன் பின் வேகவைத்த வெங்காயம், தக்காளி, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டவேண்டும் .
பிறகு வேக வைத்துள்ள பருப்பை குழைத்து சேர்க்கவும் பிறகு பருப்பு கலவையை நன்றாக கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.ஒரு கொதிவந்ததும் கொத்தமல்லி தழை தூவவும்.