பள்ளிபாளையம் சிக்கன் செய்ய தேவையான பொருள்கள் :
சிக்கன் – அரை கிலோ
காய்ந்த மிளகாய் – 12
சின்ன வெங்காயம் – கால் கிலோ
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – 10
துருவிய தேங்காய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 4 தேக்கரண்டி
முதலில் சிக்கனை எலும்பு இல்லாமல் கொட்டைபாக்கு அளவிற்கு சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். காய்ந்த மிளகாயை சிறுத் துண்டுகளாக கிள்ளி விதையை தட்டி எடுத்து விட்டு மிளகாயை மட்டும் தனியே எடுத்து வைக்கவும்.
அதன் பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிள்ளி வைத்திருக்கும் மிளகாயை போடவும். மிளகாய் சிவந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்பு வெங்காயம் வதங்கிய பின், கழுவி வைத்த சிக்கனை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி விடவும். 2 கையளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.
அடுத்தது தண்ணீர் வற்றி சிக்கன் வெந்ததும் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான பள்ளிபாளையம் சிக்கன் தயார்.