Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பீட்ரூட் பச்சடி… செய்து பாருங்கள் …!!!

பீட்ரூட் பச்சடி செய்ய தேவையான பொருள்கள் :

பீட்ரூட்                                      – 3
உப்பு                                           – தேவையான அளவு
தயிர்                                           – 300 மில்லி
தேங்காய்த்துருவல்            –  1 கப்
சீரகம்                                          –  2 இஞ்ச்
பச்சை மிளகாய்                     – 2
சின்ன வெங்காயம்               – 3
கறிவேப்பிலை                        –  7 இலைகள்
கடுகு                                             –  1  டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய்             – 4 டீஸ்பூன்
கறிவேப்பிலை                         –  7 இலைகள்

 செய்முறை :

முதலில் அரைக்க வேண்டியதை மிக்ஸியில் தண்ணீர் விடாமல், கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் பீட்ரூட்டை போட்டு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து வேக விட்டு இறக்கி, ஆற விடவும்.

அதன் பின் இதை மிக்ஸியில் தண்ணீரோடு சேர்த்து, அரைத்தெடுத்து வாணலியில் சேர்த்து, அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும்.

அடுத்து இத்துடன் அரைத்தவற்றைச் சேர்த்துக் கலக்கவும். தயிரை நன்கு அடித்து வைக்கவும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து தாளிக்க வேண்டியதைச் சேர்த்துத் தாளித்து கலவையில் கொட்டி இறக்கி, தயிர் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.

Categories

Tech |