Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான புதினா தக்காளி சட்னி … செய்து பாருங்க …!!!

புதினா தக்காளி சட்னி செய்ய தேவையான பொருள்கள் :
தக்காளி                       – 2
இஞ்சி                            – சிறிய துண்டு
காய்ந்த மிளகாய்     – 7
எண்ணெய்                  – ஒரு டீஸ்பூன்
புதினா                            – கால் கப்
உப்பு                                – தேவைக்கேற்ப
பெரிய வெங்காயம் – ஒன்று
செய்முறை :

முதலில் தக்காளி, வெங்காயத்தை நறுக்கவும்.பின் வாணலியில் எண்ணெய் சூடான பின் புதினா, காய்ந்த மிளகாய், தக்காளி, இஞ்சி, வெங்காயத்தை வதக்கவும்.

அதன் பின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். விருப்பப்பட்டால், நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்க்கலாம் சுவையான புதினா தக்காளி சட்னி தயார்

Categories

Tech |