Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான புளிசாதம் … செய்து பாருங்க …!!!

புளி சாதம் செய்ய தேவையான பொருள்கள் :

சாதம்                           – 2 கப்
புளி                                – ¼ கப்
நிலக்கடலை            – 3 கரண்டி
வெந்தயம்                  – ¼கரண்டி
நிலக்கடலை            – 3 மேஜைக்கரண்டி
நீர்                                   – தேவைக்கு
உப்பு                              – தேவையான அளவு
வெல்லம்                    – 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்              – 1/8 தேக்கரண்டி
எண்ணெய்                  – 3 தேக்கரண்டி
கடுகு                              – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு      – ½ தேக்கரண்டி
பெருங்காயம்             – ஒரு சிட்டிகை
வத்தல் மிளகாய்      – 3
கறி வேப்பிலை         – சிறிது

 செய்முறை :

முதலில் நிலக்கடலையை லேசாக வறுத்துக் கொள்ளவும். புளியை 1 கப் நீரில் ஊற வைத்து அதனை நன்கு மசித்துக் கொள்ளவும். பின்பு வெந்தயத்தை வறுத்துக் கொள்ளவும்

அதன் பின்  உரலில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.பின்பு எண்ணெய் சூடாக்கி கடுகு, உழுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.பின்பு வத்தல் மிளகாய், கறி வேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அதன் பின் புளி தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

அடுத்து கெட்டியானதும் வெந்தயத் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.பின்பு வெல்லம் சேர்த்து நன்கு கலக்கி சிறிது நேரம் வேக வைக்கவும்.

பின்பு கலவை கெட்டியானதும் தீயை அணைத்து விடவும். பின்பு அதனுடன் வேக வைத்த அரிசி மற்றும் வறுத்த நிலக்கடலை சேர்த்து நன்கு கிளறவும் பரிமாறவும்.

Categories

Tech |