Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பெரிய வெங்காய சட்னி… செய்து பாருங்கள் …!!!

பெரிய வெங்காய சட்னி செய்ய தேவையான பொருள்கள் :

பெரிய வெங்காயம்          – ஒன்று
தனியா                                    – அரை மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல்                – 2
கடலைப் பருப்பு                  – அரை மேசைக்கரண்டி
புளி                                             – சிறு நெல்லிக்காய் அளவு
பெருங்காயம்                        – குண்டு மணி அளவு
உப்பு                                            – அரை தேக்கரண்டி
எண்ணெய்                               – 2 தேக்கரண்டி

 செய்முறை :

முதலில் பெரிய வெங்காயத்தை தோல் உரித்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத் துண்டை போட்டு பொரித்து பின் அதில் கடலைப் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல் போட்டு 2 நிமிடம் வறுத்து எடுக்கவேண்டும் .

பின்னர் அதில் வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவேண்டும் ஆறிய பின் மிக்ஸியில் வதக்கியவற்றை போட்டு புளி, உப்பு சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி அரைத்து எடுக்கவேண்டும் . சுவையான பெரியவெங்காய சட்னி தயார்

Categories

Tech |