Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான மகிழம்பூ முறுக்கு… செய்து பாருங்கள் …!!!

மகிழம்பூ முறுக்கு செய்ய தேவையான பொருள்கள் :

பச்சரிசி                           –  400 கிராம்
பாசிப்பருப்பு                 –  200 கிராம்
கடலைப்பருப்பு          –   100 கிராம்
எண்ணெய்                    – அரை  கிலோ
பெருங் காயத்தூள்   – சிறிதளவு
எண்ணெய்                   – 3 டீஸ்பூன்
உப்பு                                 – தேவையான அளவு

செய்முறை :

முதலில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை சிவக்க வறுத்து, பின்பு ஆறவிட்டு, அதில் அரிசியுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

அதன் பின்  காய்ச்சிய எண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு பிசையவும்.

பிறகு அந்த மாவை முள்ளு முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் முறுக்காக பிழியவும். முறுக்கு சிவந்த பின் எடுக்கவும்.

Categories

Tech |