மசாலா முட்டை செய்ய தேவையான பொருள்கள் :
முட்டை – 4
சாம்பார் பொடி -4 டீஸ்பூன்
உப்பு – தே.அ
எண்ணைய் – 5 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் முட்டை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும் ,பின் எஃக் கட்டர் / கத்தியினால் வட்டமாக வெட்டவும். பின் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணைய் ஊற்றி மசாலாபொடி,உப்பு போட்டு நன்கு கலக்கிய பிறகு வெட்டிய முட்டையை போட்டு உடையாமல் சாம்பார் பொடியை முட்டையில் படும் படி மிக்ஸ் பண்ணவும், 4 நிமிடத்தில் ரெடி ஆகிவிடும் . மிகவும் நல்ல ருசியான மசாலா முட்டை ரெடி.