மாங்காய் இஞ்சி சாதம் செய்ய தேவையான பொருள்கள் :
உதிராக வடித்த சாதம் – 2 கப்,
தோல் நீக்கி துருவிய மாங்காய் இஞ்சி துருவல் – அரை கப்,
மஞ்சள்தூள் -அரை டீஸ்பூன்,
எலுமிச்சை – சாறு,
எண்ணெய் தலா – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுந்து தலா – அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 4,
கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு -தேவைக்கு
உளுந்து – 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு -அரை டேபிள் ஸ்பூன்,
தனியா -2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் -3,
எண்ணெய் -3 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில், மாங்காய், இஞ்சி துருவல், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றை வதக்கி, கரகரப்பாக அரைத்தெடுங்கள்.
அதன் பின் பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை சிவக்க வறுத்து பொடியுங்கள். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலையை தாளியுங்கள். சாதத்தில், அரைத்த விழுது, பொடித்து வைத்துள்ள பொடி, உப்பு, தாளிதக் கலவை, எலுமிச்சம் சாறு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்குங்கள்.