மாங்காய் புலாவ் செய்ய தேவையான பொருள்கள் :
உதிராக வடித்த சாதம் – 3 கப்
கிளி மூக்கு மாங்காய் – 1
வெங்காயம், பச்சை மிளகாய் – 2
முந்திரித் துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி – 2 டேபிள்ஸ்பூன்
கேரட் – 1
பச்சைப் பட்டாணி – 1/2 கப்
பட்டை – சிறு துண்டு
ஏலக்காய், கிராம்பு – 2
சோம்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
முதலில் மாங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும். கேரட், வெங்காயம் பச்சை மிளகாயை ஆகியவற்றையும் பொடியாக நறுக்கவும்.
அதன் பின் அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெயை காயவிட்டு பட்டை, கிராம்பு, உடைத்த ஏலக்காய், சோம்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். இத்துடன் பட்டாணி, பச்சை மிளகாய், மாங்காய் மற்றும் காய்கறிகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும்
அடுத்து அடுப்பை தணித்து சாதத்தை சேர்த்து, உப்பு போட்டு கிளறவும். பிறகு மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, கொத்தமல்லியை சேர்த்துக் கிளறி, முந்திரித் துண்டுகளை மேலாக தூவவும்..