மாம்பழப் பாயசம் செய்ய தேவையான பொருள்கள் :
செய்முறை :
முதலில் மாம்பழங்களைக் கழுவி ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சூடு ஆறியதும் தோல், கொட்டை இவற்றை நீக்கிவிட்டுச் சாறெடுத்து இரண்டு கப் தண்¬ணீர் சேர்த்து அத்துடன் சர்க்கரையையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
முதலில் நன்றாகக் கொதித்ததும் இறக்கி வைத்து முந்திரி கிஸ்மிஸ் பழங்களை நெய்யில் வறுத்து அத்துடன் சேர்த்து நன்றாக ஆற வைக்க வேண்டும்
பின்பு பாலில் கொஞ்சம் தண்¬ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி வைக்க வேண்டும். மாம்பழச் சாறு ஆறியவுடன் பாலுடன் ஏலக்காய்ப் பொடியைத் தூவி கலக்கிவிட்டு பரிமாறவும். சுவையான மாம்பழம் பாயாசம் தயார்.