Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான மா இஞ்சி ஊறுகாய் … செய்து பாருங்கள் …!!!

மா இஞ்சி ஊறுகாய் செய்ய தேவையான பொருள்கள் :

எலுமிச்சை சாறு    – ½ கப்
மா இஞ்சி                 – 250 கிராம்
பச்சை மிளகாய்   – 10
உப்பு                            – தேவையான அளவு

 செய்முறை : 

முதலில் மா இஞ்சியை நன்கு கழுவி சுத்தம் செய்து அதன் தோலை நீக்கி அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய இஞ்சியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின் பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சையை நறுக்கிக் கொள்ளவும். ஊறுகாய் செய்ய தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். மா இஞ்சியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

அடுத்து பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறவும். அதனை ஒரு டப்பாவில் வைக்கவும். பின்பு அதனை மூடி ஊற வைக்கவும். இதனை தாளித்தும் பயன் படுத்தலாம். மா இஞ்சி ஊறுகாய் தயார்.

Categories

Tech |