முட்டை பழம் செய்ய தேவையான பொருள்கள் :
முந்திரிப்பருப்பு – 15
ஏலக்காய் பொடி – 2 ஸ்பூன்
நெய் – 3 ஸ்பூன்
சர்க்கரை – 4 ஸ்பூன்
நேந்திரம் பழம் – ஒன்று
முட்டை – 2
முதலில் நேந்திரம் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வேறொரு பாத்திரத்தில் முட்டை, சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து கலக்கிக் கொள்ளவும். .
அதன் பின் ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதில் நறுக்கின பழத்தை சேர்த்து வதக்கவும். லேசான இளம் பொன்னிறத்துக்கு வந்தபின் தீயை அணைத்து விட்டு முட்டை, முந்திரி கலவையுடன் கலக்கவும்.
அடுத்து பாத்திரத்தில் பழம் பொரித்த மீதமுள்ள அதே நெய்யில் இந்த கலவையை ஊற்றி தீயை நன்கு குறைத்து மூடி இட்டு வேக விடவும்.
பிறகு மேற்புறம் திருப்பாமலேயே வேகும் வரை மூடி சுமார் 10 நிமிடங்கள் விடவும். பின்பு அதனை தட்டில் கவிழ்த்து வெட்டி பரிமாறவும்