முள்ளங்கி சாப்ஸ் செய்ய தேவையான பொருள்கள் :
பிஞ்சு முள்ளங்கி – 1 கிலோ
கடலைப்பருப்பு – 1 கப்
வரமிளகாய் – 12
சோம்பு – 2 டீஸ்பூன்
பூண்டு – 7 பல்
சின்ன வெங்காயம் – 12
நறுக்கிய மல்லித்தழை
உப்பு – தேவையான அளவு.
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை :
முதலில் முள்ளங்கியை துருவி, நன்றாகப் பிழிந்து வைத்துக்கொள்ளுங்கள். கடலைப்பருப்பை ஊறவிட்டு, வரமிளகாய், சோம்பு, பூண்டு, வெங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள்.
அதன் பின் பிழிந்த முள்ளங்கையை, அரைத்த பருப்புக் கலவையுடன் பிசறி, மல்லித்தழை சேர்த்துப் பிசைந்து, சூடான எண்ணெயில் கிள்ளிப் போட்டு, மொறுமொறுப்பாக வேகவிட்டு அள்ளுங்கள்.