Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான ரவா இட்லி… செய்து குழந்தைகளுக்கு குடுங்க …!!!

ரவா இட்லி செய்ய தேவையான பொருள்கள் :

வறுத்த ரவை         – 1 கப்
நெய்                           – 2 ஸ்பூன்
கடுகு                         – 1/2 ஸ்பூன்
கடலை பருப்பு     – 1 ஸ்பூன்
உழுந்து பருப்பு    – 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 4
இஞ்சி                            – 1 துண்டு
பச்சை மிளகாய்        – 1 பொடியாக நறுக்கியது
கேரட்                               – 1/2 பொடியாக நறுக்கியது
கொத்துமல்லி இலைகள் – 1/2 கப் பொடியாக நறுக்கியது
வறுத்த முந்திரிப் பருப்பு – 15
தயிர்                                          – 2 கப்
உப்பு                                          – 1 ஸ்பூன்

செய்முறை : 

முதலில் நெய்யை காயவைத்து, அதில் வரிசையாக கடுகு முதல் பச்சை மிளகாய் வரை தந்துள்ளவற்றை தாளித்து, அதில் ரவையை சேர்த்து வறுக்கவும்

பின்பு ரவையின் சூடு ஆறியதும், அரிந்த கொத்துமல்லி தழைகளையும் தயிரையும் சேர்த்து பிரட்டி, உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.

அடுத்து இட்லி பானையில் தண்ணீர் வைத்து கொதித்ததும், தட்டுகளில் எண்ணை தடவியோ அல்லது ஈரமான துணி விரித்தோ குழிகளில் ஒவ்வொரு முந்திரிப்பருப்பும் கொஞ்சம் கேரட் நறுக்கியதையும் வைத்து அதன் மேல் ரவா இட்லி மாவினை ஊற்றி வேக விடவும் சுவையான ரவா இட்லி ரெடி.

Categories

Tech |