Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான வஞ்சிர மீன் கருவேப்பிலை வறுவல்…செய்வது எப்படி…?

வஞ்சிர மீன் கறிவேப்பிலை வறுவல் தேவையான பொருட்கள்:

வஞ்சிரமீன்                 – 4 துண்டு
எலுமிச்சைச் சாறு   – 2 தேக்கரண்டி
கருவேப்பிலை          – சிறிது.
மிளகாய் தூள்            – 25 கிராம்
மஞ்சள் தூள்               – 1/2 தேக்கரண்டி.
தனியா தூள்               – 10 கிராம்
மிளகு தூள்                   – 5 கிராம்
சீரகத் தூள்                   – 5 கிராம்
அரிசி மாவு                  – 100 கிராம்
உப்பு                               – தேவைக்கேற்ப
எண்ணெய்                  – தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் வஞ்சிர மீன் 4 துண்டு, மிளகாய் தூள் 25 கிராம், மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி, தனியா தூள் 10 கிராம், மிளகு தூள் 5 கிராம், சீரகத் தூள் 5 கிராம், அரிசி மாவு  100 கிராம், தேவையான அளவு உப்பு என அனைத்தையும் சேர்த்து  ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்த மீன் துண்டுகளை போட்டு பொரித்தெடுக்கவும். பொரித்த மீனுடன் சிறுது எலுமிச்சை துண்டுகளை சேர்த்து பரிமாறவும். அவ்ளோதான் வஞ்சிர மீன் வறுவல் ரெடி.

Categories

Tech |