Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான வட்டிலப்பம் …. செய்து பாருங்கள் …!!!

வட்டிலப்பம் செய்ய தேவையான பொருள்கள் :
சர்க்கரை                    – 250 கிராம்
தேங்காய் பால்        – (1-2) கப்
முட்டை                     – 5
ஏலக்காய்த்தூள்     – அரை தேக்கரண்டி
கஜூ                             – 30 கிராம்
பிளம்ஸ்                     – 30 கிராம்
ஜாதிக்காய்த்தூள் – அரை தேக்கரண்டி
மாஜரின்                  – ஒரு தேக்கரண்டி
செய்முறை : 

முதலில் தேங்காய்ப்பாலில் சர்க்கரையை நன்றாக கரைக்கவும். சர்க்கரை நன்றாக கரைந்ததும் வடிதட்டினால் வடிக்கவும். ஒரு பாத்திரத்தில் எல்லா முட்டைகளையும் உடைத்து போட்டவும். எக்பீட்டரினால் முட்டையை நன்றாக நுரைக்கும்படி அடிக்கவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் மாஜரின் பூசிய பின் சர்க்கரை கலந்து வடித்த பாலுடன் கஜூ, பிளம்ஸ், ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும். பின்பு அக்கலவையுடன் அடித்த முட்டையின் நுரையை கைகளினால் கிள்ளி(அள்ளி) இக்கலவையின் மேலே போடவும் (கரண்டி பாவிக்ககூடாது அத்துடன் கலக்கவும் கூடாது, அசைக்கவும் கூடாது.

அதன் பின் அப்பாத்திரத்தை மைக்ரோ அவனில் அல்லது நீராவியில் அவிக்கவும். அவித்த பின்பு பிரிட்ஜில் வைத்து குளிரட்டிய பின்பு அதை ஐஸ்கிரீம் போடும் கரண்டியால் எடுத்து ஐஸ்கிரீம் கப்பில் போட்டு பரிமாறவும்.

Categories

Tech |