வரகரிசி ஆனியன் அடை செய்ய தேவையான பொருள்கள் :
வரகு அரிசி – 2 கப்
புழுங்கல் அரிசி – 2 கப்
பாசிபருப்பு – 1/4 கப்
மிளகாய் வற்றல் – 5
துவரம் பருப்பு – 1/4 கப்
உளுத்தம் பருப்பு – 1 கப்
உப்பு – தேவைக்கேற்ப
பெருங்காயம் – சிறிது
எண்ணெய் – தேவைக்கேற்ப
வெங்காயம் – 4
கொத்துமல்லி – கொஞ்சம்
செய்முறை :
முதலில் வரகு அரிசி, புழுங்கல் அரிசி மற்றும் பருப்பு வகைகளை சுத்தம் செய்து தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊறவிடவும்.
பின் வெங்காயம் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்பு அரிசி, பருப்பு வகையறாக்கள் நன்கு ஊறிய பின்பு அத்துடன் கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கிரைண்டரில் கொரகொரப்பாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவேண்டும்.
பின் அடுப்பில் தோசைக் கல் சூடேறியதும் ஒரு கரண்டியாக மாவை எடுத்து ஊற்றி, சிறிது எண்ணெயை சுற்றி ஊற்றி, அதன் மீது பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லியையும் தூவி சுட்டெடுக்கவும்.