Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான வரமிளகாய்த் துவையல்… செய்து பாருங்கள் …!!!

வரமிளகாய்த் துவையல் செய்ய தேவையான பொருள்கள்:

வரமிளகாய்                 – 10
பெரிய வெங்காயம்  – 1
சின்ன வெங்காயம்   – 10
பூண்டு                             – 1 பல்
தக்காளி                          – 2
பெருங்காயம்              – 1 துண்டு
உப்பு                                  – அரை டீஸ்பூன்
புளி                                    – எலுமிச்சை அளவு
எண்ணெய்                    – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு                               – அரை டீஸ்பூன்
உளுந்து                         – ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை          – 1 இணுக்கு

செய்முறை : 

முதலில் பெரிய வெங்காயம், சின்னவெங்காயம், பூண்டைத் தோலுரித்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும் .

அதன் பின்  தக்காளியைத் துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் வரமிளகாய், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் பூண்டு, தக்காளி, பெருங்காயம், உப்பு, புளி சேர்த்து நீர் விடாமல் அரைக்கவேண்டும்.

அடுத்து  கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து தாளித்து கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டிக் கலந்து பரிமாற வேண்டும். இப்பொழுது சுவையான வரமிளகாய்த் துவையல் ரெடி.  இது இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும்.

Categories

Tech |