Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான வாழைக்காய் பொடிமாஸ்!  

தேவையான பொருட்கள் : 

வாழைக்காய் – 2,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு,
கடுகு – 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, உ.பருப்பு – தலா 1 ஸ்பூன்,
வரமிளகாய் – 1,
பச்சை மிளகாய் – 2,
கறிவேப்பிலை – 1 கொத்து,
தேங்காய்த்துருவல் – 1/4 கப்,
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
பெருங்காயம் – 1 டீஸ்பூன்,
மிளகு, சீரகத்தூள் – 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்.

செய்முறை : 

வாழைக்காயை இரண்டாக வெட்டி உப்பு சேர்த்து வேக விடவும். வெந்ததும் தோலை உரித்துவிட்டு வாழைக்காயை கேரட் துருவியில் துருவவும். வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தாளித்து கறிவேப்பிலை சேர்த்து வரமிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது வதக்கவும்.

பின்னர் பெருங்காயம் சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் துருவிய வாழைக்காய் துருவல் சேர்த்து வதக்கி மிளகு, சீரகத்தூள் தூவி தேங்காய்த்துருவல் சேர்த்துக்கிளறி இறக்கி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்.

Categories

Tech |