புழுங்கல் அரிசி – 4 கப்
உளுத்தம்பருப்பு – 1 கப்
பச்சரிசி – 2 கப்
பச்சை மிளகாய் – 6
வெங்காயம் – 3
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக 2 1/2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
அதன் பின் அவற்றை தனித்தனியாக அரைத்து வைத்து , ஒன்றாக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு இந்த மாவை ஒரு இரவு புளிக்க வைத்து கொள்ளவேண்டும். பிறகு, கடாயில் எண்ணெய் உற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, மாவில் கொட்டிக் கலக்கவும் வைக்கவும்.
அடுத்து தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி, எண்ணெய் தேய்த்து, மாவை ஊத்தப்பம் போல் வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு தோசை வெந்ததும் எடுக்கவும்.