Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான வெண்டைக்காய் பச்சடி… செய்து பாருங்கள் …!!!

வெண்டைக்காய்               – 10
வெங்காயம்                         – ஒன்று
பச்சை மிளகாய்                 – ஒன்று
கடுகு                                       – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை                  – சிறிது
புளி                                          – ஒரு நெல்லிக்காய் அளவு
மல்லித் தூள்                      – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள்                      – அரை தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள்       – ஒரு தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது  – அரை தேக்கரண்டி
தேங்காய் விழுது          – ஒரு தேக்கரண்டி
உப்பு                                     – சிறிது
எண்ணெய்                       – சிறிது

செய்முறை :

முதலில் நறுக்கிய வெண்டைக்காயை தலைப்பகுதியிலிருந்து நடுப்பகுதி வரை கீறி விட்டு எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்து அரை கப் அளவிற்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின் புளிக் கரைசலுடன் மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், இஞ்சி, பூண்டு விழுது, தேங்காய் விழுது, மிளகாய்த் தூள் மற்றும் உப்பு எல்லாவற்றையும் போட்டு கலந்து வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

பின்பு வெங்காயம் வதங்கியதும் கலந்து வைத்திருக்கும் புளிக் கரைசலை ஊற்றவும். அதனுள் பொரித்த வெண்டைக்காயை போட்டு மூடி வேக விடவும். வெண்டைக்காய் சேர்த்த புளிக்கலவை வற்றியதும் இறுதியில் சீனியை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். எல்லா மசாலாவும் சேர்ந்து பிரண்டு எண்ணெய் வெளிவரும் போது அடுப்பை அணைக்கவும்.

Categories

Tech |