வெண் பொங்கல் செய்ய தேவையான பொருள்கள் :
பச்சரிசி _2 கப்
மஞ்சள் தூள் _1 டீஸ்பூன்
பாசிப்பருப்பு _3/4 கப்
உப்பு _தேவையான அளவு
நெய் _1 டேபிள்ஸ்பூன்
சீரகம் _2 டீஸ்பூன்
முந்திரி _10
மிளகு _1 டீஸ்பூன்
கறிவேப்பிலை _பாதி கொத்து
செய்முறை :
முதலில் பாசிப்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்.பிறகு கழுவிவிட்டு ஒரு பாத்திரத்தில்(அ) குக்கரில் போதிய தண்ணீர் விட்டு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
அடுத்தது பருப்பு பாதி வெந்த நிலையில் அரிசியைக் கழுவி பருப்புடன் சேர்த்து ஒன்றுக்கு மூன்று என தண்ணீர் ஊற்றி நன்றாகக் குழைய வேக வைக்கவும்.(ஏனெனில் பொங்கல், சாதம் போல் இல்லாமல் கொஞ்சம் குழைய இருக்க வேண்டும்..
பின் ஒரு முறை திறந்து கிளறி சிறிது மஞ்சள் தூள்,உப்பு போட்டு சிறிது நேரம் மூடி வேக வைக்கவும்.பருப்பு, சாதம் இரண்டும் ஒன்றாகக் கலந்து குழைய வெந்த பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும்.
பின்பு ஒரு வாணலியில் நெய் எடுத்து சூடுபடுத்தி அதில் மிளகு(ஒன்றிரண்டாகப் பொடித்து) சீரகம், இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை தாளித்து பொங்களில் கொட்டிக் கிளறவும்.
அடுத்தது தாளித்த பிறகு பொங்கலை வாணலியில் கொட்டிக் கிளறி இறக்கலாம். இது மிகவும் நன்றாக இருக்கும்.