Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கிராமத்து மனம் மாறாத தித்திப்பான சர்க்கரை பொங்கல்..!!

சுவைமிகுந்த தித்திப்பான கிராமத்து சர்க்கரை பொங்கல்:

தேவையான பொருட்கள்:

பச்சரிசி                            – அரைகிலோ
மண்டை வெல்லம்      – அரைகிலோ
கிரிஸ்மஸ் பழம்           -50 கிராம்
முந்திரி பருப்பு              -50 கிராம்
பாசிப்பருப்பு                 – கால் கிலோ
நெய்                                   -200 கிராம்
ஏலக்காய்                        – 5

செய்முறை:

அரைகிலோ அரிசிக்கு 8 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். பச்சரிசியும், பாசிப்பருப்பு நன்றாக கழுவிட வேண்டும். அப்பொழுது கழுவும் பொழுது முதல் தண்ணீரை தூர ஊற்றிட வேண்டும். இரண்டாம் முறை கழுவும் தண்ணீரை சூடாக்கும் தண்ணீரோடு ஊற வேண்டும். 

அந்த தண்ணீர் கொதித்து பொங்கிவரும் பொழுது கழுவி வைத்திருக்கும் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை அதில் போட்டு நன்றாக வேகவைக்கவும். சோறு நல்லா கொளஞ்சிறனும்.. பின்னர் நாம் மண்டை வெல்லம் நல்லா நச்சு வச்சிருக்கணும், சோறு வெந்ததும் அதில் போட்டு நன்றாக கரையும் வரை அடிபிடிக்காமல் கிளறிவிட வேண்டும்.

ஒரு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரிப்பருப்பு போட்டு நன்கு பொன்னிறமாக வரும் வரை வருது எடுக்க வேண்டும், பின்னர் கிரிஸ்மஸ் பழம் போட்டு நன்கு வறுத்த பின் அதை சர்க்கரை பொங்கலில் போட்டு நன்றாக கிளறி விட வேண்டும்..

பின்னர் ஏலக்காய் பொடியாக்கி வைத்திருப்பதையும் அதில் போட்டு நன்றாக கிளற வேண்டும்… அவ்ளோதாங்க சுவை மிகுந்த தித்திப்பான கிராமத்து சர்க்கரை பொங்கல் ரெடி……!!

 

Categories

Tech |