நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
எலும்பு – 250 கி
முருங்கைக்காய் – 1
து.பருப்பு – 50 கி
வெங்காயம் – 1
இஞ்சி – பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
தக்காளி – 2
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தனியா தூள் – 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
புளித் தண்ணீர் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
அரைக்க தேவையானவை :
தேங்காய் – 2 மேசைக்கரண்டி
கசகசா – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
தாளிக்க தேவையானவை:
பிரியாணி இலை – 1
பட்டை – சிறிய துண்டு
கல் பாசி – சிறிது
சோம்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – 1 கொத்து
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின் முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பின்பு நெஞ்செலும்பை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு, அதனுடன் பருப்பு, உப்பு, மஞ்சள்தூள் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை 5 நிமிடங்கள் சிம்மில் வேக வைக்கவும்.
ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து கூழாகும் வரை வதக்கவும்.
பிறகு, குக்கரில் உள்ள பொருட்களைச் சேர்த்து, பின் அதனுடன் மசாலா தூள் சேர்த்து, முருங்கைக்காய், தேவையான உப்பு, புளித் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய் விழுதைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
இப்போது சுவையான, மணம் மிகுந்த நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார் சாப்பிட தயார்.