மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கொல்லப்பட்டிருக்கலாம் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுப்பிரமணியன் சுவாமி சந்தேகம் தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங்கின் உடல் கடந்த மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சடலமாகக் கைப்பற்றப்பட்டது. பாலிவுட் பிரபலங்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அவரது காதலி எனக் கூறப்படும் பாலிவுட் நடிகை ரேகா சக்கரவர்த்தி பாலிவுட் திரைப்பட தயரிப்பளார் ஆதித்ய சோப்ரா, திரைப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்டோரிடம் மும்பை போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சுஷாந்த் சிங் மரணம் கொலையாக இருக்கலாம் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். சுஷாந்த் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி திரு சுப்பிரமணியன் சுவாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் திரு மோடிக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.