Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

சுஷாந்த் மரணத்தின் மர்மம்…. “நீங்கள் உண்மையின் பக்கம் நிற்பீர்கள்” பிரதமரிடம் வேண்டுகோள் வைத்த சகோதரி…!

சுஷாந்த் சிங் மரணம் குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என பிரதமருக்கு சுஷாந்த் சகோதரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் சுஷன்ட் சிங் தற்கொலை சம்பவம் சினிமா உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் நிலவும் வாரிசு அரசியலும், சுஷாந்த் சிங்கிடம் இருந்த பட வாய்ப்புகளை தட்டிப் பறித்ததுமே இவரின் தற்கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது. சுஷாந்த் சிங்கின் தந்தையான பாட்னா, சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தி மற்றும் சிலர் சுஷாந்திற்கு  மனரீதியாக தொல்லை தந்ததும், அவரின் கிரிடிட் கார்டை பயன்படுத்தி 15 கோடி ரூபாய் வேறு ஒருவர் கணக்கில் மாற்றியதாகவும் புகார் கொடுத்தார்.

 

இது போன்று பல்வேறு புகார்கள் குற்றச்சாட்டுகள் என சுஷாந்தின்  மரணம் மர்மமாகவே உள்ளது. இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கவேண்டும் என சுஷாந்தின் சகோதரி டேட்டா சிங்க் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ” நான் சுஷாந்த் சிங் ராஜ்புத் சகோதரி. சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கை உடனடியாக தீவிரமாக விசாரிக்க வேண்டும். இந்திய நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நீங்கள் உண்மையின் பக்கம் நிற்பீர்கள் என்று என் மனம் சொல்லிக் கொண்டே இருக்கிறது. நாங்கள் எளிமையான குடும்பம். உங்களிடம் எனது வேண்டுகோளை முன்வைத்துள்ளேன்” என பிரதமர் மோடியை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |