Categories
ஆட்டோ மொபைல்

சுஸூகி புதிய அறிமுகம்….. ரூ.86,500 விலையில் அட்டகாசமான ஸ்கூட்டர்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

சுஷுகி நிறுவனத்தின் அவெனிஸ் ஸ்கூட்டரின் புதிய திட்டம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 125cc இன்ஜின் FI தொழில்நுட்பத்துடன் தரப்பட்டுள்ளது.  இன்ஜின் 6750 rpm-ல் 8.7 PS அதிகப்பட்ச சக்தியையும், 5500 rpm-ல் 10Nm டார்க்கையும் உருவாக்கக்கூடியது.  106 கிலோ எடையை கொண்டுள்ளதால் குறைந்த எடை கொண்ட ஸ்கூட்டர்கலில் ஒன்றாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் எல்.இ.டி லைட்டிங் ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்பிற்கு தரப்பட்டுள்ளது. ஸ்கூட்டரில் வெளிப்புற ஹிஞ்ச் வகை எரிபொருள் கேப் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சீட்டிற்கு கீழே உள்ள இடம் மேலும் பெரிதாக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரின் விலை ரூ.86,500-ஆக அறிவிக்கபட்டுள்ளது. இது முந்தைய ட்ரிம்மை விட ரூ.200 குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |