சூடானில் கனமழைக்கு பலி எண்ணிக்கையானது 88 ஆக உயர்ந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூடானில் சென்ற ஜூன் முதல் பெய்து வரக்கூடிய கன மழையால் இறந்தவர்களின் எண்ணிக்கையானது செவ்வாய்க்கிழமை 88-ஆக அதிகரித்தது. பல்வேறு கிராமங்களில் தொடா் மழை பெய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூடானில் பருவ மழை ஜூன் மாதத்தில் துவங்கி செப்டம்பா் வரையிலும் நீடிக்கும். இதையடுத்து ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் அது அதிகபட்சமான அளவை எட்டும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு பருவ மழைக்கு இதுவரையிலும் 83 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.