இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் வாங்கக்கூடிய அத்தியாவசிய பொருட்களில் பாலும் ஒன்று. குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் டீ, காபி சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள். அதுவும் தாய்மார்கள் குழந்தைகள் சரியாக உணவு சாப்பிடவில்லை என்றால் ஒரு டம்ளர் பாலை தான் குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். ஏனெனில் பாலில், மேஜெனிசம், புரதம், கால்சியம், துத்தநாகம், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. அனைவரும் ஒரே மாதிரியான பாலை பருகுவதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பாலை பருகுகிறார்கள். ஒரு சிலர் பாலை சூடாக சாப்பிடுவார்கள், ஒரு சிலர் குளிர்ந்த பாலை சாப்பிடுவார்கள். எப்படி சாப்பிட்டாலும் பாலில் இருக்கும் நன்மை நமது உடலுக்கு வந்து சேர்கின்றது.
இதெல்லாம் இருக்கட்டும் நீங்கள் ஒரு சில விஷயங்களை கவனித்தீர்களா? பாலை காயவைத்து அதனை டம்ளரில் ஊற்றி வைத்துவிட்டு சிறுது நேரம் கழித்து பார்த்தால் பாலின் மேல் ஏடு உருவாகி இருக்கும். சில பேருக்கு இந்த ஏடு மிகவும் பிடிக்கும், ஒரு சிலருக்கு இந்த எடு பிடிக்காது. இந்த ஏடு ஏன் பாலின் மேல் உருவாகிறது? இதற்கான அறிவியல் காரணம் என்னவென்றால் சாதாரண பசும்பாலில் தோராயமாக 87.7 சதவீதம் தண்ணீர், 4.9 சதவீதம் லாக்டோஸ் என்று அழைக்கப்படும் மாவுச்சத்து, 3.4 சதவீதம் கொழுப்பு, 3.3 சதவீதம் புரதம், 0.7 சதவீதம் இதர கனிமங்கள் உள்ளன. நீர், கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், தாது பொருட்கள் உள்ள பாலை கொதிக்க வைக்கும் போது நீர் தனது கொதிநிலையை அடையும். பின்னர் நீர் கொதித்து நீராவியாக மாறுகிறது. அதேநேரத்தில் கொழுப்பு, புரதம் ஆகியவை தனியாக பிரிந்து பாலின் மேல்புறத்தில் ஏடு வருகின்றது. பால் ஆறியதும் எடுத்து பார்த்தால் அது மெல்லிய சவ்வு போல் இருக்கும்.