Categories
அரசியல் மாநில செய்திகள்

சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம் – திமுக MLA அதிரடி முடிவு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி ஒதுக்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. ஒரு சில கட்சிகளில் தொகுதி ஒதுக்கீடுவதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஒரு சில எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு விலகி வருகின்றனர். இந்நிலையில்  திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன் பாஜகவில் இணைந்துள்ளார்.

வரவிருக்கும் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததன் காரணமாக திமுக மீது இருந்த அதிருப்தியில் இருந்த சரவணன் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளார். இதையடுத்து இவருக்கு பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |