அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி அங்கு உள்ள பெண்களுடன் தேர்தல் பாரம்பரிய நடனம் ஆடினார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முதற் கட்ட வாக்குப்பதிவு வரும் 27ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அசாம் சென்றுள்ளார் .
லக்கிம்பூர் என்ற இடத்திற்கு சென்ற திருமதி பிரியங்கா காந்தி அங்கிருந்த தேயிலை பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பிறகு அவர்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமான சூமூர் நடனம் ஆடினார்