பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், அனைத்து கட்சியினரும் போட்டி போட்டு தேர்தல் பிரசாரங்களை செய்து வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் பணியை துவங்கியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் கெஜ்ரிவால் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். ஒவ்வொரு பெண்ணின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ஆயிரம் டெபாசிட் செய்யப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.