பஞ்சாப் மாநில மொகாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் எம்பிஏ முதலாமாண்டு படிக்கும் ஒரு மாணவி 60 மாணவிகள் குளிக்கும் போது வீடியோ எடுத்து தனது ஆண் நண்பருக்கு அனுப்பியதாகவும் அவர் அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாகவும் புகார் எழுந்தது.இந்த விவகாரம் சூடு பிடிக்கவே நேற்று இரவு முழுவதும் சண்டிகர் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வீடியோ எடுத்த மாணவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.பஞ்சாப் மாநிலத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தால் சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று முதல் செப்டம்பர் 24ஆம் தேதி வரை ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.