தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அடுக்கடுக்கான பல்வேறு கேள்விகளை அதிரடியாக தொடுத்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன், திருச்சி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரை மூன்றாம் கட்டமாக தேர்தல் பரப்புரை செய்கிறார். சீரமைப்போம் தமிழகத்தை எனும் முழக்கத்துடன் தேர்தல் பரப்புரை நடந்து கொண்டிருக்கிறது.
இதனையடுத்து ஒரே நாளில் 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்த அவர் எம்ஜிஆர். ஊடலின் சாதனை படைத்தவர்களை நீக்க துணிச்சல் உண்டா?. எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கும் முன்னரே, அவரவர் குவித்த சொத்துகளுக்கு கணக்கு காட்ட சொன்னவர் வாத்தியார். இப்போது உள்ளவர்கள் கணக்கு காட்டுவீர்களா? எனவும் அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்துள்ளார் கமல்ஹாசன்.