Categories
தேசிய செய்திகள்

சூட்கேசில் தலையில்லாத உடல்….. குடும்பமே சேர்ந்து செய்த உச்சகட்ட கொடுமை….. நடந்தது என்ன?….!!!!

குழந்தையை தத்து கொடுக்க தாய் மறுத்த காரணத்தினால் குடும்பமே சேர்ந்து ஒரு பெண்ணை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் மும்பை அருகில் உள்ள கடற்கரையில் சூட்கேசில் பெண்ணின் சடலம் ஒன்று கிடைத்தது. அதை சோதனை செய்தபோது தலை இல்லாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆறு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. முக்கிய ரயில் நிலையங்களிலும் இது குறித்த அறிவிப்பு பலகை வைத்தனர். எனினும் ஒரு வருடம் கடந்த பின்னரும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி சானியா என்ற பெண்ணை காணவில்லை என்று கூறி அவர் உறவினர் காவல் துறையில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் விசாரணை செய்தபோது இறந்த பெண்ணின் புகைப்படமும் உறவினர் கொடுத்த புகைப்படமும் ஓரளவு ஒத்துப்போனது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சானியாவின் கணவர் ஆசிப் தங்கள் பழைய வீட்டை விற்றுவிட்டு நும்பிரா என்ற இடத்துக்கு வந்துவிட்டதாகவும், சானியா யாருடனோ ஓடிச் போய்விட்டார் என்று கூறியுள்ளனர். அந்த சடலத்தின் டிஎன்ஏ வோடு சானியாவின் மகள் டிஎன்ஏ வை வைத்து சோதனை செய்ததில் அந்த சடலம் சானியா உடையது என்பது தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு சானியாவின் கணவர் மீது சந்தேகம் இருந்தது. அவரிடம் விசாரணை நடத்திய போது பல அதிர்ச்சி உண்மைகள் வெளிவந்தது.

விசாரணையில், கணவரே மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். தங்கள் மகளை ஆசிப் தன்னுடைய குழந்தை இல்லாத சகோதரியிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். ஆனால் இதற்கு சானியா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிப் சானியாவை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கை கால்களை கட்டி தண்ணீர்த் தொட்டிக்குள் போட்டு கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். பின் சானியாவின் கழுத்தை அவரது மாமனார் அறுத்து போலிஸ் கண்டுபிடிக்கக்கூடாது என்பதற்காக தலையில் இருந்த முடியை அப்புறப்படுத்தியிருக்கின்றனர். இதுமட்டுமின்றி மைத்துனர் உதவியுடன் ஆசிப் மனைவியின் உடலை சூட்கேஸில் அடைந்து கடற்கரையில் வீசி தலையை கடலில் வீசியுள்ளனர். இந்தக் கொலை தொடர்பாக கணவர் ஆசிப், அவர் மூத்த சகோதரர், பெற்றோர் ஆகியோரை போலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |