ஹாலிவுட் நடிகரான ஜானிடெப், இயக்குனர் மைவென் இயக்கும் ரெஞ்ச் திரைப்படமான ஜீன் டு பாரியில் நடிக்கிறார். இந்த படம் இப்போது போஸ்ட் புரொடக்ஷன் நிலையில் இருக்கிறது. முன்னாள் மனைவி ஆம்பர் ஹியர்டுடன் அவதூறு வழக்கில் நடிகர் வெற்றி பெற்ற பின் ஜீன் டு பாரி அவரது முதல் படம் ஆகும்.
இத்திரைப்படம் வருகிற 2023ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரெஞ்சு ஷோபிஸ் வர்ணனையாளர் பெர்னார்ட் மான்டீல்ட், நேரம் குறித்த பிரச்சனைகள் காரணமாக மைவெனுடன், ஜானி டெப் வாய்மொழி சண்டையிட்டதாக கூறினார்.
இந்நிலையில் பெர்னார்ட் மான்டீல்ட் கூறியிருப்பதாவது “ஜானிடெப் ஒரு சிறந்த நடிகர் ஆவார். சில நேரங்களில் காலை 6 மணிக்கு டீம் தயாராக இருக்கும். ஆனால் யாரும் வந்திருக்க மாட்டார்கள். இதன்காரணமாக இயக்குனர் மைவென் கோபமடைந்தார். அதன்பின் அடுத்த நாள் அவர் வரவில்லை, ஜானி டெப் வந்தார். இது பைத்தியக்காரத் தனம் என அவர் இயக்குனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்” என கூறினார்.