தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ஜோதிகா திருமணத்திற்கு பின் சில ஆண்டுகள் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார். இதையடுத்து 36 வயதினிலே திரைப்படம் வாயிலாக மீண்டும் நடிக்க துவங்கினார். அதன்பின் மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு ஆகிய கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.
இந்த நிலையில் நடிகரான மம்முட்டி உடன் “காதல்-தி கோர்” படத்தில் ஜோதிகா நடிக்கிறார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான “தி கிரேட் இந்தியன் கிட்சன்” படத்தை இயக்கிய ஜியோபேபி இயக்குகிறார். அண்மையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை ஜோதிகா பங்கேற்றார். இந்த நிலையில் காதல்-தி கோர் படத்தின் சூட்டிங் தளத்துக்கு நடிகர் சூர்யா சென்று இருக்கிறார். இதை மம்முட்டி தன் சமூகவலைதளப்பக்கத்தில் புகைப்படம் ஒன்று பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.