அதிமதுரத்தில் உள்ள நன்மைகளைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம்.
அதிமதுரம் என்பது ஒரு வகை நாட்டு மருந்து பொருள். இதில் உள்ள பசைப் பொருளும், பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கின்றது.
உடலுக்கு ஊட்டச் சத்தாகவும், சொட்டு முத்திரத்தை சரி செய்து, சிறுநீர் புண்களை சரிசெய்யும். கல்லடைப்பையும் சரி செய்கின்றது.
அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம அளவு எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து 5 கிராம் அளவு தேனில் கலந்து தலைக்கு தேய்த்து வந்தால் சூட்டினால் உண்டாகும் இருமல் சரியாகும்.
அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் இளநரை ஏற்படாமல் தடுக்க முடியும். முடி உதிர்வதையும் தடுக்கலாம்.