தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் மொத்தமாகவுள்ள 268 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தல் தமிழகம் முழுவதுமுள்ள சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் நடைபெற்றுள்ளது. மேலும் தமிழகத்திலுள்ள மொத்த 12820 வார்டுகளுக்கும் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது.
இதில் தமிழகம் முழுவதும் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதற்கிடையே வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டு அருகே உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மொத்தமாகவுள்ள 268 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.