போஸ்ட் ஆபீஸ் சேமிப்பில் மக்களின் நலனிற்காக அதிகப்படியான திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கிறது. அதில் ஒன்றான கிராம சுரக்ஷா யோஜனா திட்டம் பற்றி காண்போம். கிராம சுரக்ஷா திட்டம் போஸ்ட் ஆபீஸில் சிறந்த திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நீங்கள் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் ஈட்ட விரும்பினால் இந்த திட்டத்தை தாராளமாக தேர்வு செய்துகொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் மாதம் 1411 ரூபாய் முதலீடு செய்துகொள்ளலாம். மேலும் முதிர்வு காலத்தில் ரூபாய் 35 லட்சம் பெற்றுக்கொள்ளலாம்.
எனவே சிறு முதலீடு மூலமாக லட்சக்கணக்கான வருவாயைப் பெறலாம். இது ஒரு ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகும். மேலும் இது கிராம மக்களுக்கானதாகும். கிராமப்புற மக்களுக்கு, அதிலும் குறிப்பாக பெண்களுக்கு, பின்தங்கிய மக்களுக்கு உதவும் நோக்கத்தில் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாலிசியை எடுத்து 5 வருடங்களின் முடிவில் எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றுவதற்கான கூடுதல் அம்சமும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றது. மேலும் இந்தத் திட்டத்தில் சேர வயது வரம்பு 19 முதல் 55 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் ரூபாய் 10 லட்சம் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதற்கான பிரீமியங்களை ஒவ்வொரு மாதமும், காலாண்டும், ஆறு மாதம் மற்றும் ஆண்டு அடிப்படையில் செலுத்திக் கொள்ளலாம்.
இதில் 19 வயது முதலீட்டாளர் 55 வயது வரை ரூ.10 லட்சத்தை முதலீடு செய்ய விரும்பினால் அதற்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1515 பிரீமியம் செலுத்த வேண்டும். 58 வயது வரை முதலீடு செய்ய விரும்பினால் ரூ.1463 டெபாசிட் செய்ய வேண்டும் மற்றும் 60 வயது வரை முதலீடு செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு மாதமும் பிரீமியமாக ரூ.1411 டெபாசிட் செய்ய வேண்டும்.இப்படி முதலீடு செய்யும் போது 55 வயதில் முதலீட்டாளர் ரூ.31.60 லட்சமும், 58 வயதில் ரூ.33.40 லட்சமும், 60 வயதில் முதிர்வுத் தொகையாக ரூ.34.60 லட்சமும் பெறுவார்கள்.
இதில் கடன் வசதி உட்பட பலவிதமான சலுகைகள் வழங்கப் படுகின்றது. இருப்பினும் இந்த திட்டத்தில் நான்கு ஆண்டுகள் முதலீடு செய்த பின் மட்டுமே கடன் கிடைக்கும். அவசர காலங்களில் 30 நாட்கள் சலுகை காலம் அனுமதிக்கப்படுகின்றது. மேலும் முதலீடு செய்த நாளிலிருந்து பாலிசி மூன்று வருடங்களுக்கு பிறகு சரண்டர் செய்து கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்கு முன் சேமிப்பை மூடினால் போனஸுக்கு தகுதி இல்லை.