Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“சூப்பரா பாலீஷ் போடுவோம்” பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பாலீஷ் போடுவதாக ஏமாற்றி தங்க நகைகளை திருடி சென்ற வடமாநில நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கக்குச்சி கிராமத்தில் ராஜ்குமார்-நளினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நளினி வீட்டில் தனியாக இருந்த போது 2 வடமாநில நபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து தங்க நகைகளை பாலிஷ் செய்து தருவதாக கூறி அந்த நபர்கள் நளினியிடம் இருந்து 5 1/2 பவுன் தங்க நகைகளை வாங்கியுள்ளனர். அதன்பின் பாலீஷ் செய்வதற்கு வெந்நீர் வேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளனர்.

இதனால் நளினி வெந்நீர் எடுத்துவர வீட்டிற்குள் சென்றுள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் தங்க நகைகளுடன் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து நளினி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் வந்த வடமாநில நபரை பிடித்து விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாத் ஷா என்பது தெரியவந்துள்ளது. இவர்தான் நளினியிடம் இருந்து தங்க நகைகளை மோசடி செய்தவர் என்பதும் உறுதியானது. அதன்பின் காவல்துறையினர் தங்க நகைகளை பறிமுதல் செய்து, பிரசாத் ஷாவை கைது செய்துள்ளனர். மேலும் அவரது கூட்டாளியான கிஷன் லால் என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |