Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்…! ஆதார் இணைப்பு சிறப்பு முகாம்களில் இவர்களுக்கு முன்னுரிமை…. சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் உள்ள 2,811 மின் அலுவலகங்களிலும் நேற்று முதல் தொடங்கியது. இந்த முகாம்கள் வரும் டிச.31ம் தேதி வரை நடக்கிறது. காலை 10.30 முதல் மாலை 5.15மணி வரையிலும் விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம்களில் சென்று இணைப்பு செய்துகொள்ளலாம்.

இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்களில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதன் முக்கியத்துவத்தை பிளக்ஸ் போர்டு மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

Categories

Tech |