Categories
Tech டெக்னாலஜி

சூப்பரோ சூப்பர்…. இனி வாட்ஸ்அப்பில் இ டிக்கெட் சேவை…. மும்பை மெட்ரோ புதிய அறிமுகம்….!!!!

மும்பை மெட்ரோ ஒன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மும்பை நகரில் வெர்சோவா-அந்தேரி- கட்கோப்பர் வழியில் மெட்ரோ ரயில் சேவையை இயக்கி வருகின்றது. மும்பை மெட்ரோ ஒன் பிரைவேட் லிமிடெட் இ டிக்கெட் ஆன் வாட்ஸ்அப் என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் சேவையில் வாட்ஸ் அப் செயலியில் இ டிக்கெட் வழங்கப்படுவது உலகிலேயே இதுதான் முதல் முறை. தற்போது டிக்கெட் கவுண்டர்களில் கிடைக்கின்ற பேப்பர் க்யூ ஆர் டிக்கெட் சேவையின் நீட்சி. இந்த சேவையில் இணைய பயனர்கள் தங்களின் வாட்ஸ்அப் எண்ணிலிருந்து `Hi’ என எழுதி 9670008889 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.

இது மட்டும் அல்லாமல் மும்பை மெட்ரோ ஆன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் காம்போ கார்டுகள், மொபைல் கியூ.ஆர். டிக்கெட்கள் மற்றும் லாயல்டி ப்ரோகிராம் என பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகம் செய்து வருவதாக தெரிவித்து உள்ளது. இதற்கு முன்னதாக வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் தனது பேமண்ட் சேவையை 100 மில்லியன் பயனர்களுக்கு நீட்டிக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த எண்ணிக்கை 40 மில்லியன் என கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது இதனை 100 மில்லியனாக அதிகப்படுத்திக் கொள்ள தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் அனுமதி வழங்கி உள்ளது.

Categories

Tech |